Sathyam rap TriplA

by TriplA
(India)


சொற்பொழிவாற்றிட நேரம் இல்ல கண்ணா
மூன்று நிமிடம் போதும் உலகை கலங்கிட
பாத்து பாடல் அல்ல வசனம் ஒன்று தான்
இரும்பையும் இதழாக மாற்ற வல்லது

இஷ்டப்படி பாடிட இது ஒன்னும் பாட்டில்ல
சொல்லிசை பிருவுள நன் ஒன்னும் புதுசில்ல
ட்ராப் என்னும் பீடுள சொல்ல போறேன் கோஸ்பிளா வந்துட்டோம் வந்துட்டோம்
இப்போ தேவனை உயர்த்திட
அழைப்புக்கு செவிகொடு நோக்கம் ஒன்றுதான்
சத்தியத்தை சொல்லிட உன்னிடத்தில் சேர்த்திட
..... ட்ரிப்ல நாங்கதான் வெட்கப்பட ஒண்ணுமில்ல அல்லேலூயா

சொல்வதை மட்டும் கவனமாய் கேள்
ரெட்சிக்கப்பட உனக்கு எத்தனை காலங்கள்
உலகமே ஆதாயம் ஆத்தும நஷ்டமானால்
கேள்விக்கு பதில் என்ன சொல் சொல்
உன்னை அனுப்பின காரணம் ஏன்
உன்னை அழைத்திட்ட காரணம் ஏன்
சொல் சொல் முள் முடி உனக்காக
சுமர்ந்தாரே எதற்காக
பதில் உனக்காக

சிறு சிறு தவறுகள் உன்னை அவரிடமிருந்து பிரிக்கும் பெரும் சுவருக்கு
கரை திரை உள்ளங்கள் இருதயம் விரும்பும் வேண்டாத எங்களை விட்டு விலகு
பாவம் பெருகுது மீண்டும் கிருபை அழைக்குது
வசனத்தை பார் கலப்பையில் கை வைத்து பின்னிட்டு பார்க்காதே பின்னிட்டு பார்த்தால் நீ உப்பு தூண் ஆவாய்
வானத்தில் கொண்டு போகி உலகத்தை காட்டுவான் சட்டெர்ன்று கீழே தள்ள ஒரு நொடி பொது
சில நிமிடம் மாத்திரம் பிரகாச இன்பம்
ஏமாற்றி எரிய கூடிய சங்கு சக்கரம்
ஆவியின் பட்டயத்தை எடுத்த இப்போ ஓடிடு
சோதனைகள் மேற்கொள்ள வசனத்தை பிடித்துக்கொள்ள
அதை தியாலும் துப்பாக்கியாலும் அளிக்க முடியாது ஒழிக்க முடியாது
இது பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் கண்களை தெளிவாகும்
கன்மலை பிளந்திடும் உள்ளதை உறுக்கிடும் நிதியம் சேர்ந்திடும்

அன்று முதல் இன்று வரை எந்த மார்க்கத்திலும் இல்லாத அப்பா பிள்ளை உறவு
என்றும் மாற ஆண்டு மேலான நாமம்
உன்னோடு என்னோடு நம்மோடு
உன்னோடு என்னோடு நம்மோடு

பரலோக தந்தை என் நிந்தை போக்கினவர்
உள்ளங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட
இதயத்தின் ஆழத்தில் தோன்றின ஏக்கத்தால்
சொல்லிசை வடிவில் பாடிட வந்துள்ளோம்
பாவத்தின் சம்பளம் மரணம்
நித்திய ஜீவனாம் ஏசுவே சரணம்
வருவார் விழித்திருங்கள்
மீண்டும் வந்தால் இந்த நிலை பரிதாபம்
யோசித்து பார் தினம் தினம் நீ செய்கிற செயல்கள்
அது தேவனுக்கு பிரியமோ !
உயிரில்லா பாறையை உளி கொண்டு செத்துக்கிட வந்துட்டோம்
வலித்தால் மன்னிக்கவும்
கடைசி காலம் இது வஞ்சிக்க படவேண்டாம்
இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காப்பார்
மகத்துவ திருத்துவ இயேசுவின் நாமத்தால்
தடைகள் மலைகள் நிறுத்த முடியா
அகல பிளவு தடுக்க முடியா
எத்தனையோ மக்கள் இன்று சத்தியத்தை அறியாமல்
நிதியத்தை விட்டுவிட்டு அழிவுக்கு கட்டுப்பட்டு
புறப்பட்டு போ இப்போ தேவனை அறிவிக்க
வேதனைகள் வந்தாலும் வேலை என்று சொல்லாமல்
சேட்டை அடித்து இப்போ உயரே எழும்பிடு
கட்டுகள் உடைத்திட புது பெலன் அடைந்திடு
கால்களை உதறிவிட்டு புறப்பட்டு பொய் கிராமங்கள் நிரப்பிட செயல் படுவோம்
பரலோகம் நிரப்பப்பட உன்னைக்கொண்டு சுவிசேஷம் அறியப்பட
தேவை பற்றி எரியும் சுவிசேஷ வாஞ்சை
அக்கினி அபிஷேகம் ஆத்தும தாகம்
நரகம் கொள்ளை அடிக்கப்பட்ட
ஜீவனுள்ள வேதத்தை கையில் எடுத்து நட
ஜீவனுள்ளா வார்த்தையை தீயாலும் துப்பாக்கியால்
அளிக்க முடியாது ஒழிக்க முடியாது

ஆரோனை போல் அழைக்க பட்டவர் என்றல்
கையில் வேதம் உண்டு வாயில் வசனம் உண்டு
இல்லை என்றல் வெறும் கைகளே வெத்து வார்த்தைகளே
இவைகள் அனைத்தும் உன்னை எங்கு கொண்டு செல்லும்
ஒருபக்கம் கிறிஸ்தவ வேடத்தை அணிந்திடு
மறுபக்கம் குறை சொல்லும் ஆவியை பெற்றவனாய்
ஆட்டம் பாடம் போட்டிக்கு போட்டி
இந்த உலகிலே பாதி விமர்சனங்கள் இந்த உலகிலே மீதி
ஓட்டத்தில் இறுதிவரை ஓடிட வசனத்தில் உறுதியாக நின்றுவிடு
ஓட்டத்தில் இறுதிவரை ஓடிட வசனத்தில் உறுதியாக பிடித்துக்கொள்ள
இது பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் கண்களை தெளிவாகும்
கன்மலை பிளந்திடும் உள்ளதை உறுக்கிடும் நிதியம் சேர்ந்திடும்

அன்று முதல் இன்று வரை எந்த மார்க்கத்திலும் இல்லாத அப்பா பிள்ளை உறவு
என்றும் மாற ஆண்டு மேலான நாமம்
உன்னோடு என்னோடு நம்மோடு
உன்னோடு என்னோடு நம்மோடு
Click here to post comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Post Your Lyrics.