Juli Ganapathy film Song

by David
(Tirunelveli, Tamilnadu)

என்னை மெய்மறக்க செய்த பாடலின் வரிகள்:
இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்?
பிரிவென்னும் துயரிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிலையென நான் தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ
நிழல் தர நீ இங்கு வருவாயோ........ (இதயமே)

சரணம் - 1
பொன்னைப்போல் பூவைப்போல் உன்னைச் சூடி கொண்ட நான்
இன்று வாடி கிடப்பதோ
பிரிவிங்கே உண்மை தான் என்றால் உறவு ஏனய்யா
வாழ்வது கனவு பூமியா
பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேறது....... (இதயமே)

சரணம் – 2
எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே
அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் பொங்கிடும் கங்கை கண்ணம் இறங்குதே
அதுவும் உன்னை தேடுதே
நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டினிலே
இது நியாயமா...... (இதயமே)

Click here to post comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Post Your Lyrics.